Monday 27 July 2015

எமனே வரதே போ போ !!



எமன் வரமாட்டார் எப்படி ?

 கண்ட நடைமுறைகளை கடைப்பிடித்து வந்தால் எமனும் வர அஞ்சுவான்.

உண்பதிரு பொதொழிய மூன்றுபொழுதுண்ணோம்

உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்

பெண்ணுறவுதிங்களொருக்காலன்றிமருவோம்

பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்

மண்பாவுகிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்

வாழையினம் புஞ்சொழீய காயருந்தல் செயோம்

நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயிவோம்

நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்க மிடத்தே


ஒரு நாளைக்கு இரண்டு பொழுது மட்டும் உண்போம் 

.இரவில் நன்றாக தூங்குவோம். பகலில் தூங்கமாட்டோம்,

பெண்ணின் பால் உடலுறவை மாதம் ஒரு முறை மட்டும் வைத்துகொள்வோம்

உணவுண்ணும் போது தாகம் அதிகம் இருப்பினும் இடையீடயே நீர் அருந்த மாட்டோம்

வாழைக்காயில் பிஞ்சுக்காய்களையே கறி சமைத்து உண்ணுவோம், முற்றிய காய்களை கறி  சமைத்து உண்ணமாட்டோம்,

உண்டவுடன் சிறிது தூரம் நடத்தலாகிய பயிற்சியைச் செய்வோம்

இவ்வாறு நாம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்க கலங்குவான் நீண்ட ஆயுளை பெற்று வாழ்வோம்.


ஆறுதிங்கட்கொருதடவை வமனமருந் தயில்வோம்

அடர்நான்கு மாதிக்கொருக்கால் பேதியுரை நுகர்வோம்

தேனுமதிஒன்றரைக்கோர் தாநசியம்பெறுவோம்

திங்களரைக் கிரடுதரம் சவலிவிருப்புறுவோம்

வீறுசதுர்நாட்கொருகால் நேய்முழுக்கைத்தவிரோம்

விழிகள்லுக் கஞ்சனம்மூன்று நாட்கொருக்கா விடுவோம்

நாறுகந்தம் புபமிவை நடுநிசியில் முகரோம்

நமனார்க்கிங்கேதுசுஐ நாமிருக்குமிடத்தே !


ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்திதை உட்கொள்வோம்.

நான்கு மாதங்களூக்கு ஒரு முறை பேதி வருந்தை உட்கொள்வோம். ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய பீனச நோய் வராமல் தடுப்போம்.

வாரம் ஒரு முறை முகச்சவரம் செய்து கொள்வோம். நான்கு நாட்களுக்கு 

ஒரு முறை எண்ணைய்தேய்த்து குளிப்போம், மூன்று நாட்களூக்கு ஒரு முறை கண்ணுக்கு மை இடுவோம்

மணம் வீசும் கந்தம் மலர் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகர்தலைச் செய்யமட்டோம்

இவ்வாறு மருத்துவ விதிமுறைகளை நாம் மேற்கொண்டொழுகினால் எமன் நம்மை 


நெருங்க பயப்படுவான். நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.

பகத்தொழுக்கு மாதர் அசம் கரம் துடைப்ப மிவைதூன்

படநெருங்கோம், தீபமைந்தர் மரநிழலில் வசியோம்,

சுகபுணர்ச்சி அசனபசனத்தருணஞ்செய்யோம்,

துஞ்சலுண விருமலஞ்செய்யோகமழுக் காடை

வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவைமாலை விரும்போம்

வற்சலம்தெய் வம்பிதுர்சற் குருவைவிட மாட்டோம்

 நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்கும் அஉக்கோம்

நமனனார்க்கிங் கேகவை நாமிருக்க மிடத்தே !



மாதவிலக்கு அடைந்த பெண்களை  ஆடு கழுதை முதலான விலங்கிலங்கள் வரும் பாதையில் எழும் புழுதி மேலெ படும் படி நெருங்கி நடக்கமாட்டோம்

கூட்டுமிடத்தில் உண்டாகும் தூசியும் மேலே படும்படி நடந்து கொள்ள மட்டோம், இரவில் விளக்கொளியில் நிற்போரின் நிழலிலும் மர நிழலிலும் நிற்க மாட்டோம்,

பசியின் போதும் உண்டவுடன் உடலுறவு கொள்ள மாட்டோம், அந்திப்பொழுதில் தூங்குதல் உணவுண்ணல் காமகுரோதச்செயல்கள் அழுக்குடைதரித்தல், அதல்வாரிமயிர் உதிரச்செய்தல் போன்ற காரியங்களை செய்யமாட்டோம்

நம் பால் இரக்கம் உள்ள தெய்வங்களை பிதுரர் குரு ஆகியோரை எப்போதும் வணங்குவோம் பிறர்கை உதறும் போது நகத்தினின்று விழும் தண்ணீரையும் குளித்து முடி தட்டும் உதிரும் தண்ணீரும் மேலேத் தெரித்துவிழும் இடத்தில் நடக்கமாட்டோம்

இத்தகைய நெறிகளை கடைப்பிடித்து நடந்தால் எமன் நம்மிடம் அணுக அஞ்சுவான் நீண்ட நாள் வாழலாம்.

No comments:

Post a Comment