Monday 6 July 2015

சாப்பாட்டில் இத்தனை விதிகளா ?

சாப்பிடும் போது கவனிக்கபட வேண்டியவைகள்

1 காலையில் நன்கு சத்தான உணவு வயிறு நிறைய சாப்பிடவேண்டும்

2 மதியம் 3/4 பங்கு மட்டுமே சாப்பிடவேண்டும்.

3 இரவு ½ அல்லது மிதமான உணவு மட்டுமே சாப்பிடவேண்டும்.

4 சாப்பிட்ட பின் உடன் படுத்து தூங்ககூடாது. சிறுது ஓய்வு எடுக்கவேண்டும்.

5 காலையில் கிழக்கு மாலையில் மேற்கு நேக்கி சாப்பிட வேண்டும். வடக்கு நோக்கி சாப்பிடுதல் தவிர்க்க வேண்டும்.

6 நன்கு பசித்த பின் உணவு எடுக்கவேண்டும். ( To live long and Health to eat only when you Hungery)

7 நன்கு அமர்ந்து வசதியாக உட்கார்ந்து சாப்பிடுதல் நலம்.

8 நின்று சாப்பிடுவது தவிர்க்க வேண்டும்.

9 சாப்பிடும் போது வேறு சிந்தனை கூடாது.

10 உணவை ருசித்து மென்று சாப்பிடவேண்டும்.

11 கவலையாக இருக்கும் போது சாப்பிடக்கூடாது, சாப்பிட முடியாது.

12 வேலை செய்து கொண்டு சாப்பிடக்கூடாது.

13 டீவி, செய்திதாள் பார்த்துகொண்டு சாப்பிடக்கூடாது.

14 வேகமாக சாப்பிடக்கூடாது.

15 ஆறிப்போன உணவை சுடுபடுத்தி சாப்பிடகூடாது.

16 சாப்பிடும் போது நாக்கை வெளியே நீட்டி கொண்டு சாப்பிடகூடாது.

17 குழந்தைகளுக்கு சாப்பாடு எப்படி ஊட்டி கொடுக்கிறேமோ அது போல் நாமும் நமக்கு நாமே ஊட்டி கொள்ளவேண்டும்.

18    என்ன சாப்பிடுவது               எதை சாப்பிடுவது
      எப்படி சாப்பிடுவது              எவ்வளவு சாப்பிடுவது
      எப்ப சாப்பிடுவது               எங்கே சாப்பிடுவது.

19 சாப்பிடும் போது ஆள்காட்டி விரல் நீட்டி கொண்டு சாப்பிடகூடாது.

20 சாப்பிடும் போது முன்பு அல்லது சாப்பிடும் போதும் முடிந்த வரை நீர் அருந்துவதை தவிர்க்கவேண்டும்.

21 சாப்பிட்ட பின் சுமார் 10 நிமிடம் கழித்து நீர் அருந்த வேண்டும்.

22 சாப்பிடும் போது உணவு உதட்டில் பட்டு வாயில் உள்ளே வைத்து சாப்பிடவேண்டும்.

23 சாப்பிடும் போது உணவு நன்கு கூழ் போல் ஆகுமாறு அளவிற்கு சாப்பிடவேண்டும்.
24 உணவை வாயில் வைத்த பிறகு வாயை நன்கு மூடிக்கொண்டு சாப்பிடவேண்டும்.

25 உணவை வாயில் வைத்து கண்களை மூடிக்கொண்டு சாப்பிட்டால் நமது கவனம் முழுமையாக சாப்பாட்டில் இருக்கும்.

26 எண்னைய்யில் பொரித்த உணவுகள் தவிர்க்கவேண்டும்.

27 வேகவைத்த, ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.

28 உணவுடன் காய்கள் சேர்த்து கொள்ளவேண்டும்.

29 சாப்பிட்டவுடன் பழச்சாறு அல்லது பழங்கள் சாப்பிடுவது நல்லது.

30 ருசியாக இருக்கிறது என்பதற்காக அதிகமாக உணவு எடுத்து கொண்டால் பல நேரம் பட்டினியாக கிடக்கவேண்டி வரும்.

31 வயிறு என்பது செத்தவைகளை புதைக்கும் சுடுகாடு அல்ல.

32 சைவ உணவுகள் புற்று நோய்க்கு உகந்தது ஆகும்.

33 காய்களில்  கீரைகளில் நார்சத்து அதிகமாக உள்ளது

34 பழங்கள் , காய்களில் நல்ல அதிகமான நிறமுள்ளவைகள் நமது உடலுக்கு நல்லது,

35 தேவையான அளவு மட்டுமே நீர் அருந்தவேண்டும் அத்துடன் காபி, டீ,   ,   
,சாம்பார், ரசம் பழச்சாறு போன்றவைகலில் நீர் உள்ளது.

36 அதிகபடியான நீர் அருந்தும் போது சிறுநீரகம் பாதிக்கும். கழிவுகள் உடலில் சேர்ந்து வீக்கம் ஏற்படும்.

37 Charged water Copper water, Silver water, Gold water உடலுக்கு மிகவும் நல்லது.

38 Green Juice எனப்படும் கீரைகளில் இருந்து எடுக்கபடும் சாறு உடம்புக்கு நல்லது.

39 குளிர்ச்சியான சூடான உணவுகள் சேர்த்து சாப்பிட கூடாது.

40 சாப்பிடும் போது 5 வகையான சுவைகள் இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு, உப்பு இருக்குமாறு சாப்பிடவேண்டும்.

41 அதிகமான புளிப்பு சுவை உள்ள உணவுகள் தவிர்க்க வேண்டும்.

42 பழங்கள் இயற்கையகவே புளிப்பு சுவை உள்ளது.

43 பாக்கெட்களில், டின்களில் அடைத்த உணவு தவிர்க்கவேண்டும்.

44 புகை, மது போதை பழக்கம்கூடாது.

45 கை பதனம்,   வாய் பதனம்,   பிரசாதபதி கவனம்.

46 உடம்புக்கு ஒவ்வாமை தரும் உணவுகள் சாப்பிடகூடாது.

47 நாம் சாப்பிடும் உணவுகளில் முடிந்த அளவு வெண்மை நிறம் 
தவிர்க்கவேண்டும். (மருந்து, சர்க்கரை, உப்பு, பால், அரிசி).


48 மாவு போன்ற உணவுகள் அதிகம் எடுத்து கொள்ளக்கூடாது

49 சில பொண் மொழிகள்
  
மாவு பொருள் உண்டால் உடலுக்கு வரும் நோவு
  
ஆயில் குறைத்தால் ஆயுள் அதிகமாகும்
  
புகை உடம்புக்கு பகை

பழம் உடம்புக்கு எப்பவும் பலம்


உப்பு உடலுக்கு ரொம்ப தப்பு

No comments:

Post a Comment