Monday 27 February 2017

மனம்மயக்கும் கலை புத்தகத்தில்     இருந்து சில பகுதிகள்
    ஹிப்னாடிசம் என்பது அறிவுக் கூர்மையை பயன்படுத்தி   செய்யக்கூடிய மனம்சார்ந்த மருத்துவம்சார்ந்த அற்புதமான கலை. இதை மனோவசியம் அல்லது  யோகநித்திரை  என்பர்,  மேலும் இதற்கு அறிதுயில், என்றும்,
நரம்பின்தூக்கம் என்றும், தூரியதூக்கம் என்றும், மனமோகனவித்தை என்றும் மேலும் தன்னை தானறிதல்,  என பல பெயர்கள் உள்ளது. இந்த அற்புதமான கலைக்கு நான் வைத்த பெயர் தான்  மனம்மயக்கும்கலை என்பதாகும்.
நமது முன்னோர்கள், சித்தர்கள்  இந்த கலையை தனக்குதானே கற்றுகொண்டு ,இதை பயன்படுத்தி நோயைபோக்கவும், மனரீதியான கஸ்டங்களை போக்கவும் பயன்படுத்தினார்கள்.   ஹிப்னாடிசம்  என்பது  ஒரு  விஞ்ஞானம். இது மனதின் சக்தி,  உள்மனதின்   ஆற்றல்  பற்றி  உள்ளது

ஹிப்னாடிசம் வரலாறு:
ஹிப்னாடிசம் என்பது கிரேக்கமொழியில் இருந்துவந்தவார்த்தை ஆகும். இதன் அர்த்தம் என்னவென்றால் தூக்கம் என்று பொருள்., எதாவது ஒரு காரணத்தால் ஒருவரை தூங்கவைப்பது ஆகும்.  1500 வருடங்களுக்கு முன்பாக பைபில், மற்றும் இந்துவேதங்களில் இதைபற்றி எழுதபட்டுள்ளது..  ஹிப்னாடிசம் என்பது சுருக்கமாக சொன்னால் தூக்கம் என்று அர்த்தம்.. ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை தூங்கவைத்து, அவர் மனதை நம் வசப்படுத்தி, அவர் மனதில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது அல்லது அவரது உடலில் உள்ள நோய்தன்மையைபோக்கி குணமாக்குவது ஆகும்.   இந்த கலை மூலம் தனக்குதானே அற்புதமான தூக்கத்துக்கும்,, நம் உடம்பில் உள்ள நோய்களை நமக்கு நாமே தீர்த்து சுகமாக்கியும் கொள்ளலாம்..  .
இதற்கு யோகநித்திரை என்றும் பெயர். இந்த தூக்கம் அடைவதற்கு அதிர்ஸ்டம் செய்து இருக்கவேண்டும். யோகம் என்றால் அதிர்ஸ்டம் நித்திரை என்றால் தூக்கம் என்று பொருள்.  இதற்கு தூயதமிழில் அறிதுயில் என்று பெயர். இதற்கு அறிவுசார்ந்த தூக்கம் அல்லது இறைவன் கொடுத்த அருள் தூக்கம் என்று அர்த்தம் அல்லது அறிதானதூக்கம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  துயில் என்றால் தூக்கம் என்று பொருள். மனமோகனவித்தை, என்பது மனதின் அழகான என்றும், வித்தை, வித்தை என்றால்  மாயம் என்று பொருள் வரும்.    தூரியதூக்கம், அல்லது நரம்பின்தூக்கம் என்றும் மனோவசியம், மனிதவசியம் என்றும் கூட அழைக்கின்றார்கள். இதற்கு  ராஜ யோகம் என்ற ஒரு பெயரும் உண்டு.
ஒருவருடைய மனதைமயக்கி நம் வசம்படுத்துவதால்,  நம் மனதை மயக்கி நம் வசப்படுத்துவதால்   இந்த கலைக்கு  . தற்போது  மனம் மயக்கும் கலை  என்று நான் பெயர் வைத்துள்ளேன்
மின்சாரம் எப்படி கண்ணுக்கு புலப்படாமல் இருக்கின்றதோ அது போல் ஹிப்னாடிசம் சக்தியையும்  கண்களால் காணமுடியாதுஅது போல் நன்கு வீசும் காற்றைகூட  ஒருவரால்   பார்க்கமுடியாது அது போல் ஹிப்னாடிசத்தை கண்களால், காணமுடியாது  ஆனால் அதன் பலனை அனுபவிக்கமுடியும், உணரமுடியும்...



மனம் மயக்கும் கலை  புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்

தூக்கம் என்றால் என்ன?.    
தூக்கம் என்றால் என்ன ? சாதாரணமாக நாம் இரவில் தூங்கி காலையில் எழுவது தூக்கம் ஆகும். அந்த தூக்கம் நன்றாக தூங்கிஎழும் போது புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக எழவேண்டும். அந்த  தூக்கம் தான் நோயை குணமாக்குகின்றது.  அதனால் தான் மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது.. தூக்கம் களைப்பை போக்குகின்றது,, வேலை செய்து கடுமையாக களைப்பாக இருக்கும் போது நன்றாக தூங்கிஎழுந்தால் உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கமுடிகின்றது....  தூக்கத்தில் தான் உடல்வளர்ச்சி பெறுகின்றது.. அதாவது குழந்தைகள் நன்குதூங்கும் போது குழந்தையின் உடல்வளர்ச்சி அடைகின்றது.. ஒருவன் நன்குதூங்கும் போது சமாதி நிலைக்கு செல்கின்றான்.. ஒருவர் தூக்கத்தின் போது இறந்தவர்களை போல் அசைவற்று இருக்கின்றார்கள்.   அதனால் தான் ஆழ்ந்ததூக்கத்தில் அற்புதங்கள் நிகழ்த்தமுடியும். அதுதான் யோகநித்திரை அதுதான் ஹிப்னாடிசம்..
தூக்கம் என்பது  கண்களின் இமைகள் முதலில் மூடுகின்றது.., பிறகு கண்ணின் ஒளிமங்குகின்றது,,, அதனால் தான் சில நேரத்தில் பாதி தூக்கத்தில் தூங்கிஎழும் போது கண்களால் சிலநேரத்தில் பார்க்கமுடியாமல் கண்களை கசக்கி பிறகு பார்க்கின்றோம்... அடுத்து மூக்கு  எந்த வித வாசனையை அறியும்தன்மையை, உணர்ச்சியைஇழக்கின்றது..  அடுத்து நாவின்ருசி அறியும்திறன் குறைகின்றது., தொடர்ந்து செவியின் கேட்கும் திறன் குறையும். கடைசியாக ஸ்பரிச உணர்ச்சி, அதாவது தொடுதல் உணர்ச்சிகுறையும்.. தூங்கும்போது தொட்டல்தெரிவது இல்லை. இது தான் தூக்கம் ஆகும்.  
.இறைவன் கொடுக்கும் தூக்கம் இயற்கையானது. மனிதன் கொடுக்கும் தூக்கம்  தான் ஹிப்னாடிச தூக்கம் ஆகும். மனிதன் கொடுக்கின்ற தூக்கம் மகத்துவமானதூக்கம், அற்புதமானதூக்கம். .. இயற்கையாகதூங்கும் தூக்கத்திற்கும் ஹிப்னாடிச தூக்கத்திற்கும் மிகபெரிய வித்தியாசம் உள்ளது. .    சாதாரணதூக்கத்துக்கும் யோகநித்திரை அல்லது அறிதுயில் தூக்கத்துக்கும் மிகபெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனால் கொடுக்கமுடியாத ஒன்றை மனிதனால் மட்டுமே கொடுக்கமுடியும் போது அவன் சக்தி எந்த அளவு மிகபெரியது என்று தெரியவரும்.
தூக்கம் இல்லை என்றால்:
.      .
மனதில்வலி இருந்தால் ,  உடம்பில்வலி இருந்தால்    வயிற்றில்பசி  இருந்தால்  நிம்மதியாக , தூங்கமாட்டார்கள். இல்லை அவர்களால் தூங்க முடியாது. தூக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுத்துகொண்டு இருப்பார்கள்உடல்வலிக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வலிபோக்கி கொள்ளலாம்.. வயிற்றின்பசிக்கு உணவுஉண்டு பசியைபோக்கி கொள்ளலாம்.. பிறகு தூக்கம் வரும்,.  ஆனால் மனதில் உள்ள வலிக்கு மாத்திரைகள், மருந்துகள்  கிடையாது. மனதுக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் கிடையாது. மனது சரி இல்லை என்றால் தூக்கம்வராது.. பைத்தியம்பிடித்தவர்கள் மனநலம் பாதிக்கபட்டவர்கள்

தூங்கமாட்டார்கள்... மனது சரி இல்லாத போது தான் அவர்கள் பைத்தியமாக மாறுகின்றார்கள். அந்த மனநிலை பாதித்தவர்களை தூங்கவைத்தால், அவர்கள் பைத்தியம்தீர்ந்து நல்லவர்களாக மாறிவிடுவார்கள்..  அந்த மனதை சரி செய்வது தான் ஹிப்னாடிசம் சிகிச்சை முறையான ஹிப்னோ தெரபி சிகிச்சை யாகும்   

Friday 17 February 2017


 ஹிப்னாடிசம் கற்றுகொள்ள சரியான இசை  அடங்கிய DVD  vவெளியிடபட்டுள்ளது    



மனம் மயக்கும் கலை
நான் எழுதிய  3 வருட கடுமையான உழைப்பில் உருவான  மனம்மயக்கும் கலை (ஹிப்னாடிசம்) எனும் புத்தகம் வெளிவந்துவிட்டது  அருமையான படைப்பு,    புத்தகங்கள் வாங்குவது  வாழ்க்கைகான சொத்து. ஆனால்   மனம்மயக்கும் கலை  புத்தகம்  உங்கள் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து  வாழ்க்கையே இது தான்.