Monday 27 July 2015

நூறு வருடம் வாழ ஆசையா ?


நூறு வருடம் வாழ வேண்டுமா ?

ஓருவன் நூரு வருடங்கள் வாழ வேண்டும் எனில் சித்தர் தேரையர் அவர்கள் எழுதிய பாடல்கள் சில உங்களுக்காக.

பாலுண்போம் எண்ணைய்பெறின் வெந்நீரில் குளிப்போம்

பகல்புணரோம் பகல் துயிலோம் பயோதரமும் , மூத்த

ஏலஞ்சேர் குழலியரோ டினவெயொலும் விரும்போம்

இரண்டடக்கோம் ஒன்றை விடோம் இடதுகையிற்படுப்போம்

மூலஞ்சேர்கறிணுகரோம்  மூத்ததயிர் உண்போம்

முந்நாளில் சமைத்தகறி அமுதெளினும் அருந்தோம்

ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்

நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்க மிடத்தே !



அதாவது பாலுணவை உண்ணுவோம் எண்ணைய் தேய்த்து குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம், பகலில் உடலுறவு கொள்வதையும் , தூங்குவதையும், தவிர்ப்போம், கரும்பெனைனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடு வசக்குழலினைஉடைய பொதுமகளிரோடும் உடல் உறவு கொள்ளமாட்டோம். காலைஇளம் வெயிலில் அலையமாட்டோம். மலம் சிறிநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம். படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்கலித்து படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம்.முதல் நாள் சமைத்த கறி உணவை அமுதம் போன்றிருப்பினும் அதனை மறுநாள் உண்ணுதல் செய்யமாட்டோம். பசிக்காத போது உணவருந்தி உலகமே பாரிசாகக் கிடைப்தெனினும் ஏற்க மாட்டோம் பசித்த பொழுது மட்டுமே உண்ணுவோம்.

No comments:

Post a Comment