Wednesday 29 March 2017

நான் ;எழுதிய மனம்மயக்கும் கலை புத்தகத்தில் எனக்கு பிடித்த ஒரு பகுதி

நம்பிக்கை என்பது 
::
நம்பிக்கை  மீது நம்பிக்கை வேண்டும் என்கின்றார்கள் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்எந்த ஒரு செயலுக்கும் நம்பிக்கை வேண்டும் என்பார்கள்எல்லோரும் தான் நம்பிக்கை கொள்கின்றார்கள் ஆனால் எல்லோரும் வெற்றிபெற முடியவில்லை. ஏன்நம்பிக்கை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா சிலர் எதிலுமே நம்பிக்கை கொள்வது இல்லை அவர்களும் வாழ்க்கையில் பல வெற்றிகளை  பெறுகின்றார்கள் எப்படி?
கடலின் ஆழத்தைகூட அறியலாம் ஆனால் மனிதனின் மனதின் ஆழத்தை அறியமுடியாது ஆனால் ஹிப்னாடிசம் மூலம் இப்போது மனதையும் அறியமுடியும்,  ஆழத்தையும் அறியமுடியும்.

காற்றடித்து ஓயலாம், மழை பெய்தும் ஓயலாம் புயல் அடித்தும் ஓயலாம் ஏன் கடல் அலை கூட  அடித்தும்  ஓய்ந்துவிடலாம், ஆனால் மனதில் கவலை மட்டும் வந்து விட்டால் மனம் ஓய்வது இல்லை அந்த மனதையும் ஓய்ந்து அமைதி படுத்துவது ஹிப்னாடிசம்.

கைவிரல்களை எல்லோரும் ஒவ்வொருவருடைய குணத்துக்கு உதாரணமாக சொல்லுவார்கள். அதாவது எல்லா விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றதா அது போல் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி என்பார்கள். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியான குணத்தில் இருப்பது. ஒருவர் மனத்தை போல் அடுத்தவர் மனது   இருப்பதுஇல்லை. மனது வேறு வேறு மாதிரி.. இரண்டு பேர் மனமும் ஒன்று போல் இருப்பது மிகவும்கஸ்டம் .கணவன்மனைவி இரண்டு.பேர்களின் மனதும் ஒன்று போல் இருந்து விட்டால் அவர்கள் வாழ்க்கை சொர்க்கம் தான்.  அதாவது    நமது மனதை அடக்குவது போல் கை விரல்களை சரியாக மடக்கி பாருங்கள். எல்லா விரல்களும் ஒரேஅளவு ஆகிவிடும். அது தான் மனதை அடக்கினால்  எல்லோரையும் ஆழ்மன தூக்கநிலைக்கு கொண்டு சென்றால் எல்லார் மனதும் ஒரேமாதிரி ஆகிவிடும். வேற்றுமை இருக்காது. எல்லோருடைய குணமும் ஒரேமாதிரி ஆகிவிடும். அது தான் நம்பிக்கை மனதின் மீது உள்ள நம்பிக்கை.
நம்பிக்கை நார் மட்டும் கையில் இருந்து விட்டால் உதிர்ந்த பூக்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிகொள்ளும்அப்படியானால் நம்பாதவர்களுக்கு இந்த அதிசயம் நிகழாதா ?..?
ஒரு பெண் ஒருவனை அதாவது கணவனை நம்பி தன்னை வாழ்க்கை முழுவது காப்பாற்றுவான் என்று நம்பி தான் அவளை முழுமையாக அவனுடன் ஒப்படைக்கின்றாள், என்ன நடக்கின்றது அவள் நம்பிக்கை முழுவதும் நிறைவேறியதா ? கணவனிடம் இருந்து அன்பு பாசம்  கிடைத்ததா இல்லையே ஏன் ?.
ஒருவரை வாழ்க்கையில் நம்பி நம்பி நாசம் போனேன்அது நம்பிக்கை துரோகம், ஏன், ? துரோகம் சரி அது என்ன நம்பிக்கை துரோகம்ஒருவர் மீது உள்ள  நம்பிக்கை கெட்டு போனதால் அது துரோகமாகின்றதுஅது அடுத்தவர்க்கு செய்த துரோகம் அன்றி அது நம்பிக்கைக்கு செய்த துரோகம் என்று எப்படி சொல்வது.
நம்பிக்கை தான் வாழ்க்கை என்கின்றார்கள் அப்படியானால் நம்பாதவர்களுக்கு வாழ்க்கை இல்லையா?
நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் நட்சத்திரத்தை கூட இடம் மாற்றி வைக்கமுடியும்.
நம்பிக்கையை விட ஆழ்மனபதிவே சிறந்தது. வழுக்கை தலையில் முடி வளரும் என்று நம்பிக்கை, நம்பிக்கை வைத்தால் முடி வளருமா ஆழ்மனதில் வைத்து பாருங்கள் முடி வளரும்.
இரவு படுக்கைக்கு போவது காலையில் உயிரோடு  கண் விழிப்போம் என்று நம்பிதானேதூங்குகின்றோம்,. ஆனால் சிலர் இயற்கையை மீறி தூக்கத்திலே இறந்து போவது ஏன் சுனாமி, நெருப்பு, பூகம்பம் வெள்ளம், சில மணித்துளிகளில் கண்மூடி திறக்கும் நேரத்தில்  ஆயிரக்கணக்கானவர்கள் ஏன் இறந்து போகின்றார்கள் ? அவர்கள்  இரவுதூங்க செல்லும் போது நம்பிக்கை இல்லாதவர்களாக தூங்கினார்களா. யோசித்து பாருங்கள்
வாழ்வின் நம்பிக்கை என்ன ஆனது.
எதை நம்பி ஒரு விதை முளைத்து பூமியில் இருந்து வெளியே வளர்ந்து வருகின்றது. தன்னை விதைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற நம்பிக்கையாளா,  எப்படி வந்தது அந்த நம்பிக்கை. அந்த மனிதனுக்கே வாழ்க்கையின் மீது நம்பிக்கை இல்லை பிறகு அந்த செடிக்கு எப்படி வந்தது. ?
உண்மையில் நாம் சாதிக்காததை, சாதிக்க முடியாதை, சாதிக்க நினைக்கின்றோம் அதை சாதிப்போம் என்கிற நம்பிக்கையில் வாழ்கின்றோம். நாம் சாதித்தவுடன் நாம் நம்பிக்கை உடைந்து போகின்றது அது எனது திறமையால் வந்தது. என்பார்கள்
அன்று நினைத்தேன் நடந்தது, நேற்று நினைத்தேன் நடந்தது, இன்றும் நினைப்பேன் நடக்கும் நாளையும் நினைப்பது நடக்கும்  உங்கள் எண்ணங்களை ஆழ்மனதில் பதிவுசெய்தால் 
எல்லோரும் நம்பி தான் படிக்கிறார்கள் அவர்கள் படித்த தகுதிக்கு தகுந்தமாதிரி வேலைகிடைக்கின்றதா ? இல்லையே சிலர் பொறியியல்பட்டம்பெற்று ஒருசிறு கம்பெனியில் சாதாரணமான கிளார்க்வேலை செய்வது ஏன். ? சாதாரணமான படித்து வெற்றி பெற்றவன் பெரியவேலையில் சேர்ந்து வெற்றி பெறுவது ஏன்? படிப்பில் தங்கபதக்கம் பெற்றவன் வேலை கிடைக்காமல் அலைவது ஏன்?  அவர்கள் நம்பிக்கை என்ன ஆனது.
ஒருவன் வானவில்லில் கூட அம்பு விடலாம் என்று கவிதை எழுதுவது கூட ஒரு நம்பிக்கையில் தானே
இருட்டு அறையில் வெளிச்சத்தை உருவாக்க முடியும். ஆனால் வெளிச்சம் உள்ள அறையில்  இருட்டை உருவாக்க முடியுமா  ?.
செத்து போனவன் சுடுகாடுவரை சென்று மீண்டும் உயிருடன் திரும்பிய கதைகளும் நிறைய உண்டு, பிணவரையில் சென்று திரும்பிய மனிதர்களும் உண்டு இவர்கள் எதன் மீது நம்பிக்கை வைத்தார்கள்.
பட்டினத்தார் அவர்கள் தான் சாமியாராக செல்லும் போது அவரின் தாய் மிகவும் அழுது புலம்பி எனக்கு இருக்கும் ஒரே மகன் நீ ஒருவன் தான் எனக்கு நான் இறந்த பிறகு நீ தான் ஈமசடங்கு செய்ய வேண்டும்  அதை விட்டு என்னை பிரிந்து செல்கின்றாய் என்று கேட்க அதற்கு பட்டிணத்தடிகள் நான் எங்கு சென்றாலும், இருந்தாலும் நீங்கள் இறந்து உங்களுக்கு ஈமசடங்கு செய்ய நான் வந்து விடுவேன் என்று உறுதி கூறி தன் பக்தி வழியில் சென்றார். பல கோயில்களுக்கு பயணம் சென்றார்காலம் கடந்தது அவரின் தாயார் கடைசி கட்டநிலையில் இறக்கும் தருவாயில் அருகில் உள்ளவர்கள் இனி உன் மகன் வரமாட்டான் உனக்கு ஈமச்சடங்கு செய்யயாரும் இல்லை என்று வருத்தபட்டார்கள். தாய் இறந்ததுவிட அந்த செய்தியை எப்படியோ பட்டினத்தார் தன் ஆழ்மனதின் சக்தியால் தெரிந்து கொண்டு உடனே ஒரு அற்புதமான பாடலைஈரஜந்து திங்களாய் இடைநோக எனை ஈன்ற அம்மாஎன்ற அற்புதமான பாடலை பாடிக்கொண்டு தன் பிறந்த ஊரை நோக்கிநடக்கத் தொடங்கினார். என்ன அற்புதம் அவர் தாயின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்று சுடுகாட்டைஅடையும் போது அவரும் சுடுகாட்டை அடைந்து தன் தாயின் முகத்தை பார்த்து அழுது அவரின் ஈமச்சடங்கை செய்து தன்கடமையை செய்துமுடித்தார்.   பட்டினத்தாருக்கு தன் தாயின் ஈமச்சடங்கு செய்வேன் என்று நம்பிக்கை எப்படி வந்தது அவர் தன் ஆழ்மனதின் மீது நம்பிக்கை வைத்ததால்
நம்பிக்கை என்றால் என்ன ? அது எங்கு வைப்பது  எப்படி வைப்பது எப்படி வெற்றி பெறுவது சும்மா பொதுவாக நான் மிகுந்த நம்பிக்கை வைத்தேன் ஆனால் என் நம்பிக்கை தோற்றுபோய்விட்டது  ஏன்? அந்த நம்பிக்கை எல்லாம் வெளிமனதில் மட்டுமே பதிவானது நீங்கள் உங்கள் ஆழ்மனதை உங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வாருங்கள் அந்த ஆழ்மனதின் மீது நம்பிக்கை வையுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் வெற்றிமட்டுமே பெறுவீர்கள். ஆழ்மனதை எப்படி கட்டுபடுத்துவது உங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவது அது தான்      ஹிப்னாடிசம்   ஹிப்னாடிசம்     ஹிப்னாடிசம்.



No comments:

Post a Comment