Tuesday 28 March 2017

மனம்மயக்கும் கலை புத்தகத்தில் இருந்து  ஹிப்னோ ஆழ்மன     சிகிச்சை   அனுபவங்கள் 
          
கோபம் அமைதியாக மாறியது:
திருப்பூரில் இருந்து  ராதா (30)  (பெயர் மாற்றபட்டுள்ளது)  என்ற பெண்ணை அழைத்து கொண்டு, அவர் கணவர் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார் .அவர் மனைவிக்கு கடந்த நான்கு மாதங்களாக கடுமையான கோபம் வருகின்றது. கோபம் என்றால் சாதரணமான கோபம் அல்ல   குழந்தைகளை தேவையில்லாமல் அடிக்கின்றார்கணவனையும்  மோசமாக பேசுதல் மற்றும் அடிக்கவும் செய்கின்றார்.   குழந்தைகள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வருவதற்கு பயமாக உள்ளது என்று அழுகின்றார்கள். தாயின் அருகில் செல்லவே பயப்படுகின்றார்கள் வீட்டில் சமைப்பது இல்லை வேறு எந்த வேலையும் செய்வதும்இல்லை  எப்போதும் ஒரு வகையான மனரீதியான பாதிப்பில் முகத்தை உம் என்று கடுகடுப்பாக   வைத்துகொண்டு இருப்பார்.  
பக்கத்தில் வீட்டில் இருப்பவர்கள் அடுத்த வீட்டில் குடியிருப்பவர்களிடம் கண்டபடி தேவையின்றி சத்தம் போட்டு பேசி சண்டை போடுதல்,  குளிக்காமல் தலை விரித்தபடி வெறித்தபடி பார்த்து கொண்டு இருப்பது போன்று இருப்பார் .அந்த பெண் ஒரு முறை தன் கணவன் கையை கடித்து ரத்தம் வருமாறு செய்துவிட்டார். அதனால் கணவனுக்கும் பயம் பிடித்துவிட்டது மேலும் தன்னுடைய மாற்று திரனாளியான தந்தையை வைத்து கொண்டு  மிகுந்த கஸ்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் எல்லாம் அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டது  என்றும்,  அதற்கு கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்று சாட்டை அடித்து பூஜை செய்து மந்திரித்து வரவேண்டும், என்றும் சொல்ல, அந்த பெண்ணும் தனக்கு பேய் பிடித்துவிட்டது உண்மை தான், அதற்கு எங்கு கூப்பிட்டாலும் தான் வரதயார் என்று சொன்னார்கள். அந்த சமயத்தில் கோயிலுக்கு சென்று மந்திரித்து சாமி கும்பிட்டு சாட்டையில் அடித்து பேய் ஓட்டுவதற்கு கோயிலுக்கு போவதற்கு முன்பாக என்னை பற்றி கேள்விபட்டு,
என்னிடம் ஹிப்னோதெரபி சிகிச்சைக்காக அழைத்துவந்தார் அவரின் கணவன்.   நான் அந்த பெண்ணிடம் 10 நிமிடம் பேசிய பிறகு, 15 நிமிடம் நான் சொல்வதை கேட்டால்  போதும், உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூற,  அந்த பெண்ணும் ஒத்துகொண்டு எனது ஹிப்னாடிச சிகிச்சை செய்யும் போது மனதை ஒரு நிலைப்படுத்திய, பின் அவரை ஆழ்ந்த தூக்கத்துக்கு கொண்டு சென்று அவரோடு ஆழ்மனதில்நான் பேசிய போது அந்த பெண்ணின் பிரச்சனைக்கான உண்மை காரணம் கண்டுபிடிக்கபட்டது. அதாவது அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மூவரும் சேர்ந்து அவரைபற்றி தவறாக உறவினர், மற்றும் நண்பர்களிடம்  கூறவிட்டார்கள். அது பற்றி அவர்கள் அந்த பெண்ணிடம் கேட்டு இருக்கின்றார்கள். அவ்வாறு கேட்கும் போது அது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதியதால், தான் அந்த பெண்ணின் மனதை பாதித்து விட்டது.. இதனால் அந்த பெண் தான் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் அந்த ஆழ்மனபாதிப்பு கோபமாக அதை வெளிபடுத்தி காட்டுகின்றார்...

ஒருவருடைய ஆழ்மனம் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபடும் போது அந்த பாதிப்பு எதாவது ஒரு வகையில் வெளிப்படுகின்றது. அதாவது , பயம், மறதி கோபம், கனவு ,படபடப்பு, சோர்வு தூக்கமின்மை, திக்குவாய் போன்ற எதாவது ஒன்று ஆழ்மனபாதிப்பாக வெளிப்படுகின்றது. இந்த பெண்ணுக்கு கோபமாக வெளிபட்டது.  அந்த கோபம் அவர்  குழந்தைகள் மற்றும் கணவன் மீது வெளிப்பட்டது.. ஹிப்னாடிசம் சிகிச்சையின் போது அந்த பெண் தனக்கு தன் கணவனுடைய அன்பு குறைவாக கிடைப்பதாகவும்,  மனம்வருந்தி சொன்னார்.    அந்த பெண்ணுக்கு ஆழ்மனதில் அவருக்கு ஆறுதல் கூறி,   கெட்ட பதிவுகளை நீக்கிவிட்டு, பெரியவர்கள் தவறு செய்துவிட்டார்கள்அவர்களை நீங்கள் மன்னித்துவிடுங்கள்இனிமேல் இது போல் தவறு செய்யமாட்டார்கள் என்றும் இனி கணவன் உங்களிடம் மிகவும் பாசமாக இருப்பார் என்றும், மேலும் சிலநல்லபதிவுகளை ஆழ்மனதில் பதிவு செய்தேன்.   ,ஒரு  வாரம் கழித்து கணவன் மனைவி இருவரும் வந்து, கை கூப்பி வணங்கி  சார்,  எனக்கு இந்த ஒரு வாரமாக கோபமே வரவில்லை,   நான் நன்றாகா ஆகிவிட்டேன் என்று மனதார நன்றி கூறி சென்றார்கள்..

No comments:

Post a Comment