Monday 27 February 2017

மனம்மயக்கும் கலை புத்தகத்தில்     இருந்து சில பகுதிகள்
    ஹிப்னாடிசம் என்பது அறிவுக் கூர்மையை பயன்படுத்தி   செய்யக்கூடிய மனம்சார்ந்த மருத்துவம்சார்ந்த அற்புதமான கலை. இதை மனோவசியம் அல்லது  யோகநித்திரை  என்பர்,  மேலும் இதற்கு அறிதுயில், என்றும்,
நரம்பின்தூக்கம் என்றும், தூரியதூக்கம் என்றும், மனமோகனவித்தை என்றும் மேலும் தன்னை தானறிதல்,  என பல பெயர்கள் உள்ளது. இந்த அற்புதமான கலைக்கு நான் வைத்த பெயர் தான்  மனம்மயக்கும்கலை என்பதாகும்.
நமது முன்னோர்கள், சித்தர்கள்  இந்த கலையை தனக்குதானே கற்றுகொண்டு ,இதை பயன்படுத்தி நோயைபோக்கவும், மனரீதியான கஸ்டங்களை போக்கவும் பயன்படுத்தினார்கள்.   ஹிப்னாடிசம்  என்பது  ஒரு  விஞ்ஞானம். இது மனதின் சக்தி,  உள்மனதின்   ஆற்றல்  பற்றி  உள்ளது

ஹிப்னாடிசம் வரலாறு:
ஹிப்னாடிசம் என்பது கிரேக்கமொழியில் இருந்துவந்தவார்த்தை ஆகும். இதன் அர்த்தம் என்னவென்றால் தூக்கம் என்று பொருள்., எதாவது ஒரு காரணத்தால் ஒருவரை தூங்கவைப்பது ஆகும்.  1500 வருடங்களுக்கு முன்பாக பைபில், மற்றும் இந்துவேதங்களில் இதைபற்றி எழுதபட்டுள்ளது..  ஹிப்னாடிசம் என்பது சுருக்கமாக சொன்னால் தூக்கம் என்று அர்த்தம்.. ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை தூங்கவைத்து, அவர் மனதை நம் வசப்படுத்தி, அவர் மனதில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது அல்லது அவரது உடலில் உள்ள நோய்தன்மையைபோக்கி குணமாக்குவது ஆகும்.   இந்த கலை மூலம் தனக்குதானே அற்புதமான தூக்கத்துக்கும்,, நம் உடம்பில் உள்ள நோய்களை நமக்கு நாமே தீர்த்து சுகமாக்கியும் கொள்ளலாம்..  .
இதற்கு யோகநித்திரை என்றும் பெயர். இந்த தூக்கம் அடைவதற்கு அதிர்ஸ்டம் செய்து இருக்கவேண்டும். யோகம் என்றால் அதிர்ஸ்டம் நித்திரை என்றால் தூக்கம் என்று பொருள்.  இதற்கு தூயதமிழில் அறிதுயில் என்று பெயர். இதற்கு அறிவுசார்ந்த தூக்கம் அல்லது இறைவன் கொடுத்த அருள் தூக்கம் என்று அர்த்தம் அல்லது அறிதானதூக்கம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  துயில் என்றால் தூக்கம் என்று பொருள். மனமோகனவித்தை, என்பது மனதின் அழகான என்றும், வித்தை, வித்தை என்றால்  மாயம் என்று பொருள் வரும்.    தூரியதூக்கம், அல்லது நரம்பின்தூக்கம் என்றும் மனோவசியம், மனிதவசியம் என்றும் கூட அழைக்கின்றார்கள். இதற்கு  ராஜ யோகம் என்ற ஒரு பெயரும் உண்டு.
ஒருவருடைய மனதைமயக்கி நம் வசம்படுத்துவதால்,  நம் மனதை மயக்கி நம் வசப்படுத்துவதால்   இந்த கலைக்கு  . தற்போது  மனம் மயக்கும் கலை  என்று நான் பெயர் வைத்துள்ளேன்
மின்சாரம் எப்படி கண்ணுக்கு புலப்படாமல் இருக்கின்றதோ அது போல் ஹிப்னாடிசம் சக்தியையும்  கண்களால் காணமுடியாதுஅது போல் நன்கு வீசும் காற்றைகூட  ஒருவரால்   பார்க்கமுடியாது அது போல் ஹிப்னாடிசத்தை கண்களால், காணமுடியாது  ஆனால் அதன் பலனை அனுபவிக்கமுடியும், உணரமுடியும்...


No comments:

Post a Comment