Monday 22 June 2015

சாப்பிடுவது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்

சாப்பிடும் முறை:

என்ன உணவு எப்போது சாப்பிட்டாலும் எப்படி எந்த முறையில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.

முதலில் உணவின் முன்னால் அமர்ந்து கொண்டு மானசீகமாக சில நொடிகள் /றைவனுக்கு நன்றி சொல்லி விட்டு அதாவது எனக்கு இந்த உணவை கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி இந்த உணவு சாப்பிட்டபின் அது சதையகவும் ரத்தமாகவும் மாறி நான் உயிர் வாழ உதவிய இறைவனுக்கு நன்றி என்று சொல்லி கொண்டு சிறிதளவு உணவை நாம் சாப்பிடும் இலை ஓரத்தில் எடுத்து வைத்து விட்டு முதலில் சிறிது இனிப்பு சாப்பிடவேண்டும்.. அந்த இனிப்பு உதட்டில் பட்டதும் உதடு வயிற்றுக்கு தகவல் தெரிவித்து இப்போது நல்ல சத்தான உணவு வருகிறது தயாராக இருக்கவும் என்று உதடு வயிற்றுக்கு தகவல் சொல்லிவிடும். பிறகு வயிறு ஜீரணம் ஆவதற்கான ஜீரண நீர் உடன் சுரக்க ஆரம்பிக்கும். பிறகு சிறிதாக சாதத்தை (உணவை) கையில் எடுத்து வாயை அதிகம் திறக்காமல் நாக்கை வெளியே நீட்டாமல் வைத்து கொண்டு உதடுகளில் உணவு படுமாறு வாயில் உணவை வைத்து பிறகு வாயை நன்கு மூடிக்கொண்டு (காற்று உள்ளே செல்லாமல்)நன்கு மென்று அறைத்து உண்ண வேண்டும். அப்போது உணவு நன்கு கூழ் போன்ற நிலையை அடையும். வரை முழுங்கமுடியாது. வாயை திறந்தால் மட்டுமே உணவு வாயில் இருந்து உணவுக்குழாய் செல்லும். வாயை மூடிய நிலையில் நன்கு கூழ் போன்ற நிலை ஆகும் போது மட்டுமே உணவுகுழாய் வழியாக உணவு வயிற்றுக்குள் செல்லும்

வயிற்றுக்குள் சென்ற உணவு விரைவில் நன்கு ஜீரணமாகும்வாயில் உணவு மெல்லும் போது உணவில் உள்ள ருசிகள் நாக்கின் வழியாக இருதயத்திற்கு சென்று உடனடியாக அந்த  அந்த சுவைகள் ரத்தம் மூலம் அந்த அந்த உறுப்புகளுக்கு உடன் செல்கிறது.

ஆனால் சாப்பிட்ட சில நேரம் கழித்தே அந்த உணவில் இருந்து சிறுகுடல் முலம் சக்தி உறுஞ்சபட்டு ரத்தமாக மாறி ஒவ்வொரு உறுப்புக்கும்

தேவையான சத்துக்கள் சென்று அடைகிறது. சுமார் 40 கிலோ உணவு  பொருளில் இருந்து சுமார் 1 லிட்டர் ரத்தம் உருவாக காரணமாகிறது. புதிய ரத்தம் உருவாகும் போது பழைய ரத்த அணுக்கள் இறந்து மலமாகவும், சிறுநீராகவும், வெளியேறுகிறது. புதிய ரத்தம் எந்த அளவு அதிகமாக  உருவகின்றதோ அந்த அளவிற்கு நமது உடலில் நோய் தன்மைகள் தாக்காதவாறு பாதுகாக்கபடுகிறது

அதனால் தான் சத்தான உணவுகள் சாப்பிட எல்லா மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். இயற்கையான பழங்கள், காய்கறிகள், கீறைகள், தானியங்கள், போன்றவைகளில் கிடைக்கும் இயற்கை சத்துக்கள் எந்த விதமான  சத்துக்கும் இணை கிடையாது. ஆகவே இயற்கையை நேசிப்போம், இயற்கையாக வாழ்வோம்.


No comments:

Post a Comment