Wednesday 12 April 2017

ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை  ஒரு பார்வை  2



ஆழ்மனபாதிப்பின்  வெளிப்பாடுகள் தான் மனநோய்கள் என்று முன்பு பார்த்தோம்பயம் மறதி, கோபம் தூக்கம் கனவு, தற்கொலை, திக்குவாய், பக்கவாதம் போன்ற எந்த பிரச்சனை ஒருவருக்கு இருந்தால் அவருக்கு கண்டிப்பாக மனநோய்  என்று அர்த்தம்பயம் வந்தால் அவருக்கு தூக்கம் வராது, படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராதுபொதுவாக  தூக்கம் வராமல் இருப்பவர்கள் மனநோய் பாதிப்பின் அடுத்த நிலையில் இருப்பவர்கள்  ஆவார்கள்பொதுவாக மனநோய்க்கு  நவீண மருத்துவம் தூக்க மாத்திரைகள் தான் முதலில் கொடுப்பார்கள்  அதாவது மனநோய் பாதித்தவரை தூங்க வைத்தால் அவர் தூங்குவார் மனநோய் தீர்ந்துவிடும்  என்று கருத்து ஆகும்ஆனால் அவர்கள் பகலில் கூட ஒரு வித போதை மயக்கத்தில் இருப்பார்கள்  மனநிலை பாதித்தவர்கள் எதாவது செய்து கொண்டு இருப்பார்கள்  பேசிகொண்டு இருப்பார்கள். அதை சகிக்க முடியாத உறவிணர்கள் தூக்க மாத்திரை கொடுத்து  ஒரு வகையான மந்த நிலையில் இருக்க செய்வர்தூக்க மாத்திரை மூளையை செயல்பட விடாமல் செய்து மந்த புத்தியை ஏற்படுத்துகிறதுதூக்கத்துக்கு மாத்திரை தேடினால் பிறகு துக்கத்துக்கான யாத்திரையாகிவிடும், ஒரு மாத்திரை போட்டால் தூக்கம் வருவது போல் தோன்றும் ஆனால்  பல மாத்திரை போட்டால் பிறகு நம்மை தூக்க தான் வருவார்கள்  நாம் மரணம் அடைந்துவிடுவோம்.   
 நவீன மருத்துவத்தில்  தூங்க வைப்பது தான் மனநோய்க்கு தீர்வு என்று சொல்லுகிறார்கள் அதை மாத்திரை வடிவத்தில் கொடுக்கிறார்கள்   தொடர்ந்து தூக்க மாத்திரை சாப்பிடும் போது  அந்த நபரின் மனது மேலும் மேலும் அதிகமாக பாதிப்படும்   ஆனால் நோய் குணமாகாது, சில வருடங்களில் அவரின் சிறுநீரகம் பாதிக்கபடும்மனநோயுடன் உடல் நோயும் வந்துவிடுகின்றதுஇனி அவரை குணப்படுத்துவது என்பது கடினம்

மருந்து மாத்திரையால் குணப்படுத்த முடியாத மனநோய் எப்படி குணப்படுத்துவது.   ஆழ்மனபாதிப்பின் வெளிப்பாடுகள் தான் மனநோய் என்று முதலில் சொன்னேன்அந்த ஆழ்மனபாத்ப்பை ஆழ்மனதில் இருந்து வெளியேற்றாமல், ஆழ்மனதில் இருந்து அழிக்காமல்  அந்த நபரின் மனநோய் குணப்படுத்த முடியாதுஎத்தனை வருடங்கள் ஆனாலும் மனநோய் குணப்படுத்த முடியாது. அப்படியானால் மனநோய் களை எப்படி குணப்படுத்துவது  முதலில் மனநோய் ஒருவரை எப்படி எல்லாம் பாதிக்கின்றது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்

No comments:

Post a Comment